இந்தியா

போட்டித் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிப்பு: அரவிந்த் கேஜரிவால்

கடந்த இரண்டு ஆண்டுகளில் தில்லியின் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

DIN

கடந்த இரண்டு ஆண்டுகளில் தில்லியின் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடத்தில் தில்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்காமல் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,391 மாணவர்கள், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற 730 மாணவர்கள் மற்றும் 106 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களால் இந்த மைதானம் நிரம்பியுள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்னதாக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் 64 மாணவர்களும், ஜேஇஇ தேர்வில் 384 மாணவர்களும் மற்றும் நீட் தேர்வில் 496  மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி என்பது மிக முக்கியத் தேவை. தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை மோசமான நிலையில் இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT