கோப்புப்படம் 
இந்தியா

ஹிமாசலில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஹிமாச பிரதேசத்தில் கனமழை பெய்துவருவதால் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

DIN

ஹிமாச பிரதேசத்தில் கனமழை பெய்துவருவதால் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில். 

ஹிமாலத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால், பல மாவட்டத்தில் அதிக சேதம் விளைவித்துள்ளது. 

சோலன் மாவட்டத்தின் கசௌலியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள் சேதமடைந்தன. மேலும், அந்த கட்டத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் சம்பா, குல்லு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும், நிலச்சரிவுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

ஒரே நாளில் 204 மி.மீ அதிகமான மழை பெய்த நிலையில், அப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிம்லா, சிர்மௌர், சோலன், லஹால் உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 13 வரை மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT