இந்தியா

அவசரச் சட்டம்: காங்கிரஸ் நிலைப்பாட்டிற்காக கேஜரிவால் காத்திருப்பு

அவசரச் சட்டம் தொடர்பான காங்கிரஸ் நிலைப்பாட்டிற்காக தாங்கள் காத்திருப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

DIN

அவசரச் சட்டம் தொடர்பான காங்கிரஸ் நிலைப்பாட்டிற்காக தாங்கள் காத்திருப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதன் அடுத்த கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெங்களூருவில் ஜூலை 17-18 தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பெங்களூருவில் ஜூலை 17-18 தேதிகளில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, மழைக்கால கூட்டத் தொடருக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்த தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்போம் என்று காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. அவர்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக, தில்லி அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிடமாறுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து அரவிந்த் கேஜரிவால் ஆதரவு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

SCROLL FOR NEXT