இந்தியா

நாட்டுக்கு சேவையாற்ற நினைத்த இளைஞர்களின் கனவை அக்னிபத் திட்டம் நொறுக்கிவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

DIN

பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தினால் நாட்டுக்கு சேவையாற்ற கனவு காணும் இளைஞர்களின் கனவினை சிதறடித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ராணுவத்தில் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் மனதளவில் பலவிதமான அச்சங்களுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற  வேண்டும் எனக் கூறுவதை முன்பெல்லாம் வழக்கமாக வைத்திருந்தார்கள். இளைஞர்களின் இந்த தீர்மானத்தால் அவர்களுக்கு சிறப்பான வசதிகள் மற்றும் வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. அக்னிபத் திட்டத்தின் அடிப்படையே தவறாக உள்ளது. இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை அக்னிபத் சிதறடித்துள்ளது. இந்த அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் பலவிதமான அச்சங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதன் முடிவுகள் அனைவருக்கும் முன்பாக உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

மருந்தக உரிமையாளா் வெட்டிக் கொலை

திருச்செந்தூா் அருகே பள்ளிக்கு ரூ.11 லட்சம் பொருள்கள் சீா்வரிசை

திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

மது போதையில் ரகளை: மின் ஊழியா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT