கோப்புப்படம் 
இந்தியா

தொடரும் கனமழை: ஜம்மு-காஷ்மீரின் இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மூன்றாவது நாளாக தொடரும் கனமழையால் ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

DIN

மூன்றாவது நாளாக தொடரும் கனமழையால் ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதையடுத்து இந்த சிவப்பு எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய வானிலை மைய அதிகாரி கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்கள் கனமழையால் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதால் இந்த இரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கதுவா, சம்பா மாவட்டங்களை தவிர்த்து ரம்பன், தோடா, உதாம்பூர் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்துக்கு கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.

சிவப்பு எச்சரிக்கை  24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்து 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழையைக் கொடுக்கும்போது விடுக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகென்றால் அமைரா தஸ்தூர்!

கல்யாணி பிரியதர்ஷனின் புதிய தமிழ்ப்படம்!

அபிராமியும் 5 அழகான புகைப்படங்களும்!

வரலாற்றில் முதல்முறை..! ஆஸி. அணியில் இடம்பிடித்த பூர்வகுடி வீரர்கள்!

வின்டேஜ்... சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT