முகப்பு
இந்தியா

தேர்தல் தொடர்பான வன்முறையில் 10 பேர் பலி: மேற்குவங்க மாநிலத் தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க மாநிலம் முழுவதும் தேர்தல் தொடர்பான வன்முறைகளில் 10 பேர் பலியானதை காவல்துறை உறுதி செய்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:01 PM
பகிர்:

மேற்கு வங்க மாநிலம் முழுவதும் தேர்தல் தொடர்பான வன்முறைகளில் 10 பேர் பலியானதை காவல்துறை உறுதி செய்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கிராம உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 73,887 இடங்களுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. சுமாா் 2.06 லட்சம் வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. தோ்தல் நாளிலும் அத்தகைய வன்முறைகள் தொடா்ந்தன. 

முா்ஷிதாபாத், நாடியா, கூச் பெஹாா், தெற்கு 24 பா்கானாஸ், கிழக்கு மேதினிபூா் ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. தோ்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகள் பல சூறையாடப்பட்டதோடு அங்கிருந்த வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. கூச்பெஹாரின் தீன்ஹதா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 

மாநிலத்தில் மத்திய படைகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு மக்கள் பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 12 போ் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்ற சனிக்கிழமையன்று தேர்தல் தொடர்பான வன்முறையில் 10 பேர் பலியானதை காவல்துறை உறுதி செய்துள்ளதாக மேற்குவங்க மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →