இந்தியா

5 நாள்களில் 10 கோடி பேர்: திரெட்ஸின் சாதனை!

DIN

'திரெட்ஸ்' செயலி தொடங்கப்பட்ட 5 நாள்களில் 10 கோடி பேர் அதில் இணைந்துள்ளனர். 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்குப் போட்டியாக 'திரெட்ஸ்' என்ற செயலியை ஜூலை 6 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகமான இரண்டு நாள்களில் 7 கோடி பேர் அதில் இணைந்தனர். 

தொடர்ந்து 5 நாள்களில் திரெட்ஸில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக பிற சமூக வலைத்தளங்களை திரெட்ஸ் முந்தியுள்ளது. 

சாட்ஜிபிடி(ChatGPT) அறிமுகமாகி 10 கோடி பயனர்களைப் பெற சுமார் இரண்டு மாதங்கள் ஆனது. மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த டிக்டாக் இவ்வளவு பயனர்களைப் பெற 9 மாதங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல 2010ல் இன்ஸ்டாகிராம் அறிமுகமானபோது 10 கோடி பாலோவர்ஸ் வருவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது. 

இந்நிலையில் திரெட்ஸ் 100 நாடுகளில் மட்டுமே அதுவும் ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 5 நாள்களில் 10 கோடி பேர் அதில் கணக்கு தொடங்கியுள்ளது முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 

ட்விட்டரில் 2022 மே கணக்கின்படி, ஒரு மாதத்தில் 22.9 கோடி பேர் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். 

ஏற்கெனவே 100 கோடி பயனர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் மூலமாக திரெட்ஸ் கணக்கு எளிதாகத் தொடங்கலாம் என்பதால் திரெட்ஸ் வெகு விரைவாக மக்களிடையே பிரபலமாகியுள்ளது எனலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

பாலியல் குற்றவாளிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை!

கேரளத்தில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு!

கருடன் - நம்பிக்கையில் சூரி!

SCROLL FOR NEXT