இந்தியா

தில்லி செங்கோட்டைப் பகுதியில் வெள்ளம்!

DIN

தில்லி: யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தில்லி செங்கோட்டை சுற்றிலும் வெள்ள நீர் சூழந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. தில்லி, ஹரியாணா, உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கங்கை ஆற்றின் இரண்டாவது மிகப்பெரிய கிளை நதியான யமுனை ஆறு அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 208.48 மீட்டரை தாண்டியுள்ளது.

முன்னதாக கடந்த 1978 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 207.49 மீட்டரை எட்டியது. இதையடுத்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்நிலையில், கரையோரப் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், செங்கோட்டை சுற்றிலும் வாகனங்கள் பாதிக்கும் மேல் மூழ்கும் அளவுக்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT