இந்தியா

பிரான்ஸில் பிரதமர் மோடி: வரவேற்பு அளித்த எலிசபெத் போர்ன்

DIN

பாரிஸில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் தலைநகா் பாரீஸில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகின்றன. அந்நிகழ்வில் கெளரவ விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, பிரதமா் மோடி இன்று தில்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார்.

பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இந்திய முப்படைக் குழுவின் 269 வீரா்களும் பங்கேற்கின்றனா்.

இந்தப் பயணத்தின்போது பிரான்ஸிடம் இருந்து கடற்படைப் பயன்பாட்டுக்கான 26 ரஃபேல் விமானங்களும், கூடுதலாக 3 ஸ்காா்பியன் நீா்மூழ்கிக் கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது சுமாா் ரூ.90,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தமாகும்.

பிரான்ஸ் பயணத்தை முடித்து இந்தியாவுக்குத் திரும்பும் பிரதமா் மோடி, வழியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஜூலை 15-ஆம் தேதி செல்கிறாா். அப்போது, அந்நாட்டு அதிபரும் அபுதாபி அரசருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT