முகப்பு
இந்தியா

சந்திரயான்-3 நாட்டின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்: பிரதமர் மோடி

சந்திரயான்-3 நம் நாட்டின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:03 PM
கோப்புப்படம்
பகிர்:

சந்திரயான்-3 நம் நாட்டின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) விண்ணில் பாய்கிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு அந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. 

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'சந்திரயான்-3 திட்டத்துக்கு வாழ்த்துக்கள்! சந்திரயான்-3 மற்றும் விண்வெளி, அறிவியல் கண்டுபிடிப்புகளில் நாம் செய்த முன்னேற்றங்கள் பற்றி தெரிந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும். 

சந்திரயான் - 2 இன் முக்கிய அறிவியல் முடிவுகளில் சந்திரனில் உள்ள சோடியத்திற்கான முதல் உலகளாவிய வரைபடம், பள்ளம் அளவு, ஐஐஆர்எஸ் கருவி மூலம் சந்திர மேற்பரப்பில் உள்ள  நீரை தெளிவாகக் கண்டறிதல் ஆகியவை முக்கியமானது. இந்த திட்டம் குறித்த சாதனைகள் கிட்டத்தட்ட 50 இதழ்களில் வெளியாகியுள்ளது.

2023, ஜூலை 14 இந்திய விண்வெளித் துறையைப் பொருத்தவரையில் எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.நமது மூன்றாவது சந்திரப் பயணமான சந்திரயான்-3 அதன் பயணத்தைத் தொடங்க உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →