கோப்புப்படம் 
இந்தியா

ஹரியாணா: பூனைக்குட்டி என நினைத்து சிறுத்தை குட்டிகளுடன் விளையாடிய சிறுவர்கள்

குருகிராமில் பூனைக்குட்டி என நினைத்து சிறுவர்கள் சிறுத்தை குட்டிகளுடன் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

குருகிராமில் பூனைக்குட்டி என நினைத்து சிறுவர்கள் சிறுத்தை குட்டிகளுடன் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியாணா மாநிலம், குருகிராமில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நுஹ் கோட்லா கிராமம். இக்கிராமத்தில் இருந்து பிறந்து 4 நாட்களே ஆன இரண்டு சிறுத்தை குட்டிகளை வெள்ளிக்கிழமை காலை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர். இரண்டு குட்டிகளும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்ட ஆரவல்லிக்கு கொண்டு செல்லப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது, வியாழன் இரவு சிறுவர்கள் பூனைக்குட்டிகள் என நினைத்து சிறுத்தை குட்டிகளுடன் விளையாடுவதைக் கண்டறிந்தோம். சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்நடை மேய்ச்சலுக்குச் சென்றபோது குட்டிகள் விளையாடுவதைக் கண்டு அவற்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். குட்டிகள் பிறந்து நான்கு நாட்களே ஆகின்றன. 

இதுதொடர்வாக மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மேலும் குட்டிகளை அவற்றின் தாயுடன் மீண்டும் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர். வியாழன் அன்று, நுஹ்வில் உள்ள கெர்லா கிராமத்தில் வசிப்பவர்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆரவல்லிஸில் ஒரு ஜோடி சிறுத்தைகளைக் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி பேச்சு!

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT