கோப்புப்படம் 
இந்தியா

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு துணை நிற்கும்: ஜெ.பி.நட்டா

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு உள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

DIN

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு உள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசலுக்கு இரண்டாவது தவணையாக மத்திய அரசு ரூ.181 கோடி விடுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹிமாசலில் கனமழையால் பாதித்த மாவட்டங்களை நேற்று (ஜூலை 14) பார்வையிட்ட நிலையில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹிமாசல் மாநிலத்துக்கான இரண்டாவது தவணை நிதியாக ரூ.180.40 கோடி விடுவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார். ஹிமாசலில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய இந்த தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மேற்கொள்ளும். முன்னதாக ஜூலை 10 ஆம் தேதி முதல் தவணையாக ரூ.180.40 கோடியை மத்திய அரசு விடுவித்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசியதாவது:  கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்காக முதல் தவணையாக மத்திய அரசு ரூ.180 கோடியை விடுவித்தது. தற்போது இரண்டாவது தவணையாக ரூ.181 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக ரூ.361 கோடி ஹிமாலின் நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடர் தொடர்பான மேலும் பல உதவிகள் ஹிமாசலுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பேரிடரால் ஹிமாசலின் கடன்சுமை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நிவாரண விடுவிப்பு அந்த சுமையை குறைக்கும். இந்த கடினமான சூழலில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு துணை நிற்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT