முகப்பு
இந்தியா

உ.பி.யில் ஓடும் காரில் பற்றி எரிந்த தீ: 4 பேர் உடல் கருகி பலி!

உத்தரப் பிரதேசத்தின், சஹரன்பூரில் கார் தீப்பிடித்ததில் அதிலிருந்த நான்கு பேர் உடல் கருகி பலியாகினர். 

Updated On : 18 ஜூலை, 2023 at 4:46 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின், சஹரன்பூரில் கார் தீப்பிடித்ததில் அதிலிருந்த நான்கு பேர் உடல் கருகி பலியாகினர். 

டெராடூன்-அம்பாலா நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கார் லாரியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த நால்வரும் உடல் கருகி பலியாகினார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்துவிட்டதால், கேஸ் கட்டரை பயன்படுத்தி கருகிய நிலையில் இருந்த சடலங்களை வெளியே எடுத்தனர். 

Advertisement

காரின் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், காரை விட்டு வெளியேற முடியாமல் முற்றிலும் எரிந்திருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். 

இறந்தவர்கள் யாரென அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.