இந்தியா

பாலைவனத்தை வேகமாக கடந்து சாதனை படைத்த மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!

DIN

ஆஸ்திரேலியாவின் வறண்ட சிம்ப்சன் பாலைவனத்தை 13 மணி நேரத்தில் அதிவேகமாக கடந்து மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் வகை கார் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

ஸ்கார்பியோ-என் வாகனமானது சுமார் 385 கி.மீ. தொலைவைக் கடந்து 1,100 மணல் குன்றுகளைக் கடந்தும் 50 டிகிரி செல்சியஸ் உச்ச வெப்பநிலையைத் தாங்கியவாறு இந்த சாதனையை படைத்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக, 'மேட் இன் இந்தியா' எஸ்யூவி ஆகும்.

ஸ்கார்பியோ-என் எஸ்யூவி-யை ஜீன் கார்பெட் மற்றும் பென் ராபின்சன் ஆகியோர் இணைந்து பாலைவனத்தில் இயக்கியுள்ளனர். அவர்களுடன் விடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் இணைந்து இந்த சாகசத்தை ஆவணப்படுத்தியுள்ளனர். இவர்களின் இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள் அங்கீகரித்துள்ளனர்.

இது குறித்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத் தலைவர் ஆர்.வேலுச்சாமி கூறுகையில், எங்கள் எஸ்யூவி வாகனமான ஸ்கார்பியோ-என் வாகனமானது சிம்ப்சன் பாலைவனத்தை வேகமாகக் கடந்து கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் தனது முத்திரையைப் பதித்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்.

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த சாதனையானது, எங்கள் பொறியியல் மற்றும் செயல்திறன் திறன்களை நிரூபிப்பது மட்டுமல்லாமல், எங்களின் திறமையான பொறியாளர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: ஓம் பிர்லா!

2 திரைப்படங்களைத் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ்!

துறவை துறக்க அழைக்கும் அழகு! தேஜு அஸ்வினி..

உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ.9 லட்சம் கோடி யாருடையது? அழிந்துபோன தரவுகள், மன்னிப்புக் கோரிய சிஇஓ!

SCROLL FOR NEXT