இந்தியா

மகளிர் போராட்டம் எதிரொலி: ஊடரங்கு தளர்வை ரத்து செய்யும் மணிப்பூர் அரசு!

DIN

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மகளிர் போராட்டத்தை முன்னிட்டு 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இன்று ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. 

பேரணியைக் கருத்தில் கொண்டு ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் காலை 5 முதல் மாலை 6 மணி வரை உள்ள தினசரி ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இம்பால் நகரத்தின் முக்கிய சந்தையில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குவைராம்பண்ட் இமா கெய்தெல் அமைதிக்கான கூட்டு ஒருங்கிணைப்புக் குழு "மகளிர் போராட்டம்" பேரணியை வெற்றிபெறச் செய்யுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.தனஸ்சோரி ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள அனைத்து தாய்மார்களும் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை தங்கள் வீடுகளை விட்டு வெயியே வந்து என்ஆர்சியை அமல்படுத்த வேண்டும் மற்றும் அவசர சட்டப்பேரவை கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோஷங்களை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மாநிலத்தில் தொடரும் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

இந்நிலையில், மகளிர் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் தினசரி ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசு இன்று ரத்து செய்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

SCROLL FOR NEXT