48 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 47 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 47 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலான மருந்துகள் ஹிமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாகும்.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,273 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் தொண்டை கிருமித் தொற்று, இதய பாதிப்பு, கொழுப்புச் சத்து, உயா் ரத்த அழுத்தம், கண் பாதிப்புக்கு பயன்படுத்தப்படுபவை என மொத்தம் 47 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றுடன் மாரடைப்பு, பக்கவாதத்தைத் தடுப்பதற்கான ரத்த அடா்த்தியைக் குறைக்கும் ‘ஹெபாரின்’ மருந்தில் ஒன்றும் போலியாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஸ்ரீக்ள்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.