இந்தியா

கோவாவில் 15 நீர்வீழ்ச்சிகளுக்கு தடை நீக்கம்!

கோவாவில் வனவிலங்கு சரணாலயங்களுக்குள் அமைந்துள்ள 15 நீர்வீழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, நிபந்தனைகளுடன் கோவா அரசு நீக்கியுள்ளது. 

DIN

கோவாவில் வனவிலங்கு சரணாலயங்களுக்குள் அமைந்துள்ள 15 நீர்வீழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, நிபந்தனைகளுடன் கோவா அரசு நீக்கியுள்ளது. 

இதுகுறித்து வெளியிட்ட அரசாரனையில், 

மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வனவிலங்குகள் மற்றும் வாழ்விட அழிவுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும். வனத்துறையினர் விதிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் உமாகாந்த் பார்வையாளர்களை கேட்டுக்கொண்டார். 

கடந்த ஜூலை 12ல் ஏற்பட்ட இரண்டு உயிரிழப்புகளைத் தொடர்ந்து மாநில அரசு இந்த தடையை விதித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வனவிலங்கு சரணாலயங்களுக்குள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நீர்வீழ்ச்சிகள் மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக வனத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்தார். 

15 நீர்வீழ்ச்சிகளில் சத்தாரியில் 12ம், தெற்கு கோவாவில் 3ம் அடங்கும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT