கோப்புப்படம் 
இந்தியா

வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 562 பேர் பலி: என்ன காரணம்?

வங்கதேசத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சுமார் 562 பேர் பலியாகியுள்ளதாக சாலை பாதுகாப்பு அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

DIN

வங்கதேசத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சுமார் 562 பேர் பலியாகியுள்ளதாக சாலை பாதுகாப்பு அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்எஸ்எப் வெளியிட்ட அறிக்கையில், 

வங்கதேசத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் 559 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளது.  அதில் 207 இருசக்கர வாகன விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் 78 பெண்கள் மற்றும் 114 குழந்தைகள் என சுமார் 169 பேர் பலியாகியுள்ளனர். மொத்த இறப்பு விகிதத்தில் 33.75 சதவீதம் ஆகும். 

சாலைகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் சிக்சி 9 பேர் இறந்தனர். ஏழு பேர் காணாமல் போயினர். அதே நேரத்தில் 21 ரயில் தொடர்பான விபத்துக்களில் 18 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், சாலைகளில் நடந்துசென்ற பாதசாரிகள் 99 பேர் பலியாகினர். இது மொத்த இறப்புகளில் 19.18 சதவீதமாகும். 76 ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் கொல்லப்பட்டனர். இது மொத்த இறப்புகளில் 14.72 சதவீதமாகும். 

தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில்  182 (32.55 சதவீதம்),  கிராமப்புற சாலைகளில் 59 (10.55 சதவீதம்) நகர்ப்புற சாலைகளில் 3 (0.53 சதவீதம்) விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 

இதர விபத்துகள் ஓட்டுநர் கட்டுப்பாட்டு இழத்தல், வாகன மோதல்கள், வாகனத்தின் பின்புறம் இடித்தல் போன்ற காரணங்களுக்காக நிகழ்ந்துள்ளது. ஆகவே, ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 562 பேர் பலியாகியுள்ளனர். 812 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை புரிந்தவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உத்ஸவம் நாளை தொடக்கம்

மின்சாரம் பாய்ந்ததில் விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

போக்சோ வழக்கில் உணவக உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

வனப் பகுதியில் தாா்ச் சாலை அமைக்க வனத் துறை அனுமதி வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT