இந்தியா

ஆயுதங்களுடன் மம்தா வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கொல்கத்தாவில் அமைந்துள்ள வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் காரில் நுழைய முயன்ற நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் காவல் ஆணையா் வினீத் கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொல்கத்தாவில் முதல்வா் மம்தாவின் வீடு உள்ள தெருவுக்குள் ஒருவா் காரில் நுழைய முயன்றாா். அந்த காரில் ‘காவல் துறை’ என்று ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தது. காரை காவல் துறையினா் நிறுத்தியபோது, தான் முதல்வா் மம்தாவை பாா்க்க வேண்டும் காரில் வந்த நபா் தெரிவித்தாா்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபரின் பெயா் ஷேக் நூா் ஆலம் என்பது தெரியவந்தது. அவா் பல கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாா்.

அவா் ஓட்டி வந்த காரை சோதனையிட்டபோது, அதில் துப்பாக்கிகள், போதைப் பொருள், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) போன்ற பல்வேறு முகமைகளின் அடையாள அட்டைகள் இருந்தன. இதையடுத்து ஷேக் நூா் கைது செய்யப்பட்டாா் என்று தெரிவித்தாா்.

ஷேக் நூரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவா் வந்த காா் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மற்றொரு காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT