முகப்பு
இந்தியா

கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது: மகாராஷ்டிர துணை முதல்வர்

கனமழை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார் நிலையில் உள்ளது என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:41 AM
பகிர்:

கனமழை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார் நிலையில் உள்ளது என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. விதர்பாவில் கடந்த சில தினங்களாக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. 

மகாராஷ்டிர கனமழை தொடர்பாக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நாக்பூர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் கடந்த 3 நாள்களில் 15-20 நாள்களில் பெய்யக் கூடிய மழையினைப் பெற்றுள்ளன. வானிலை எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தின் அகோலா 107.9 மீ.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
முழு கட்டுரையைப் படிக்க →