இந்தியா

வடக்கு பாகிஸ்தானில் கனமழை, நிலச்சரிவுக்கு 133 பேர் பலி!

வடக்கு பாகிஸ்தானில் கடந்த மாதத்தில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

வடக்கு பாகிஸ்தானில் கடந்த மாதத்தில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து பேரழிவு மேலாண்மை வெளியிட்ட தகவலில், 

சமீபத்திய நாள்களாக வடக்கில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்துள்ளனர். பருவமழை பெய்து வருவதால் ஆங்காங்கே கனமழை மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுவரும் நிலையில், தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஞாயிறன்று வடமேற்கு மாவட்டங்களான சிட்ரல், தீர் மற்றும் பட்டாகிராமில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், பருவமழை தொடங்கிய ஜூன் 24 முதல் பாகிஸ்தான் முழுவதும் வானிலை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் இதுவரை 133 பேர் இறந்துள்ளனர். 

கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜீலம், சட்லெஜ் மற்றும் செனாப் ஆகிய 3 முக்கிய நதிகள் கனமழையால் நிரம்பியுள்ளன. கடந்த மூன்று வாரங்களில் மொத்தம் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு முன்னதாக பேரழிவு தரும் வெள்ளத்தில் சிக்கி 1,739 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

நித்ய கன்னி... மனு பாக்கர்!

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

ஐந்தரை அடியில் 2001 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை!

SCROLL FOR NEXT