இந்தியாவில் நடப்பாண்டில் மட்டும் ஜூலை 21ஆம் தேதி வரை 4.70 லட்சம் இரு சக்கர மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 90,845 வாகனங்கள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 45,925 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே இந்தியாவில் 2.78 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.