இந்தியா

ஜாா்க்கண்டில் மாா்க்சிஸ்ட் தலைவா் சுட்டுகொலை: வன்முறையால் பதற்றம்

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் சுபாஷ் முண்டா சுட்டுக் கொல்லப்பட்டாா்.

DIN

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் சுபாஷ் முண்டா சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதையடுத்து அவரது ஆதரவாளா்கள் வன்முறையில் இறங்கினா். இதனால், அப்பகுதியில் கடைகள் சூறையாடப்பட்டன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பல்வேறு பழங்குடியின அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், சுபாஷ் முண்டாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பினா். இதில் 5 முதல் 8 குண்டுகள் அவா் மீது பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இந்த கொலைக்கு காரணம் என்ன என்பது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், கொலையாளிகளைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஞ்சியில் சில இடங்களில் சுபாஷ் முண்டா ஆதரவாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சில இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. போக்குவரத்தும் முழுமையாக முடங்கியது.

ஜாா்க்கண்டைச் சோ்ந்த பழங்குடியினா் பிரிவும் சுபாஷ் மறைவைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT