முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் கனமழை குறைந்தது: நிவாரணப் பணிகள் தீவிரம்!

தெலங்கானாவில் மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
கோப்புப் படம்
பகிர்:

தெலங்கானாவில் மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. 

மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழைக்கு 16 பேர் பலியாகினர். மழை குறைந்தாலும் வாரங்கலின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. 

கோயில் நகரமான பத்ராசலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 54.60 அடியாக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.

கனமழையைத் தொடர்ந்து முலுகு மாவட்டத்தில் 8 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் சுமார் 19 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெலங்கானா டிஜிபி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.