இந்தியா

ஆர்டிஐ-யின் கீழ் கேள்வி எழுப்பியவருக்கு 40,000 பக்கங்களில் பதில்!

DIN

மத்திய பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பாக விவரங்களை தருமாறு தகவல் பெறும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய நபருக்கு, 40,000 பக்கங்களில் மாநில சுகாதாரத் துறை பதிலளித்திருப்பது தெரியவந்துள்ளது.
 இந்தூரைச் சேர்ந்த தர்மேந்திர சுக்லா என்ற அந்த நபர், தான் கோரி விவரங்கள் அடங்கிய 40,000 பக்கங்களை தனது கார் முழுவதும் நிரப்பி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். தனது அனுபவம் குறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது:
 மாநிலத்தில் கரோனா காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றிற்கான விலை ரசீதுகள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்களை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில தலைமை மருத்துவம் மற்றும் சுகாதார அதிகாரியிடம் (சிஎம்ஹெச்ஓ) கேட்டிருந்தேன்.
 ஒரு மாதம் ஆகியும் பதிலளிக்காததைத் தொடர்ந்து, ஆர்டிஐ-க்கான முதல் மேல்முறையீட்டு அதிகாரியான சரத் குப்தாவிடம் மேல்முறையீடு செய்தேன். அதனை ஏற்றுக்கொண்ட குப்தா, சுக்லா கேட்ட விவரங்களை கட்டணம் ஏதுமின்றி வழங்குமாறு உத்தரவிட்டார்.
 அதனைத் தொடர்ந்து, எனது காரில் சிஎம்ஹெச்ஓ அலுவலகத்தை அணுகியபோது, ஆர்டிஐ-யில் கோரிய விவரங்கள் அடங்கிய 40,000 பக்கங்களை அளித்தனர். அவற்றை எனது கார் முழுவதும் - ஓட்டுநர் இருக்கை தவிர- நிரப்பி வீட்டுக்கு எடுத்துச் சென்றேன் என்றார்.
 மனுதாரர் கோரிய விவரங்கள் அடங்கிய பதிலுக்கு கட்டணமாக, பக்கம் ஒன்றுக்கு ரூ.2 வசூலிக்கப்படுவது வழக்கம். கோரப்பட்ட விவரங்களை ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால் கட்டணமின்றி அதனை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்பது விதிமுறை.
 இந்நிலையில், பக்கம் ஒன்றுக்கு ரூ.2 கட்டணம் என்ற வீதத்தில் ம.பி. அரசின் பதிலுக்கு அந்த மனுதாரர் ரூ.80,000 செலுத்தியிருக்க வேண்டும். உரிய காலம் கடந்து பதில் அளிக்கப்பட்டதால், ம.பி. அரசுக்கு ஏற்பட்டுள்ள ரூ.80,000 இழப்புக்கு யார் காரணம் என்ற அறிய துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷாவால் பிரதமராக முடியாது! -தில்லி முதல்வர் கேஜரிவால்

விடாமுயற்சி வெளியீடு அப்டேட்!

மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலி: தந்தை கைது!

சிலையில்லை.. நிவேதிதா!

‘ஆல் இன் ஆல்‘ அழகுராணி!

SCROLL FOR NEXT