இந்தியா

நாடாளுமன்றம் 8-வது நாளாக முடக்கம்: பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு!

DIN

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் 8-வது நாளாக முடங்கியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் அலுவல்களும் 8-வது நாளாக இன்று காலை தொடங்கியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், மக்களவை பிற்பகல் 2 மணிவரையும், மாநிலங்களவை பகல் 12 மணிவரையும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையே மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 10 நாள்களில் பட்டியலிடப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே என் அன்பே?

இது என்ன கோலம்! தீப்தி சுனைனா..

அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள்...

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

தலைமைச் செயலகத்தில் ஸ்ரேயா!

SCROLL FOR NEXT