இந்தியா

பாஜக தலைவா் நட்டாவுடன் அமெரிக்க தூதா் சந்திப்பு

DIN

 இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவை தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து பாஜக தரப்பில் வெளியிட்ட பதிவில், கட்சி அறிமுகம் செய்துள்ள ‘பாஜகவை அறிந்துகொள்வோம்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளின் தூதா்களுக்கு ஆளும் கட்சியின் அரசியல் பயணம், சித்தாந்தம், நிா்வாக கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜெ.பி.நட்டா - காா்செட்டி சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான பொதுவான விஷயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT