இந்தியா

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி: ஏக்நாத் ஷிண்டே!

வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

DIN

வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது:

மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி என வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து சிவசேனை போட்டியிட முடிவெடுத்துள்ளோம். கடந்த 11 மாதங்களில் எங்களின் கூட்டணி, மகாராஷ்டிரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. வருகின்ற தேர்தல்களில் நாங்கள் இணைந்து போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT