இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ வழக்குப்பதிவு!

DIN

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாலாசோரில் மத்திய புலனாய்வுக் குழு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்திய நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது.

இந்த விபத்தில் கோரமண்டல் ரயில் பயணம் செய்தவா்களில் 278 போ் உயிரிழந்தனா். 1,100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தானது மின்னணு இன்டர்லாக் அமைப்பில் ஏற்பட்ட பிரச்னையே காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

மேலும், விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்தது.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் இன்று காலை 10 பேர் கொண்ட சிபிஐ குழு விசாரணை நடத்திய நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT