இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களில் மேலும் சிலர் பலி

DIN

ஒடிசாவில் கடந்த 2-ஆம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களில் மேலும் 3 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, இறந்தவா்களில் சிலரது உடல்கள் இருமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதால் முதலில் உயிரிழப்பு அதிகமாகக் கூறப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டு, மொத்த பலி எண்ணிக்கை 275 ஆக தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த எண்ணிக்கை மாற்றமில்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதால் பலி எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 1,100 பேர் காயமடைந்தனர்.

பலி எண்ணிக்கை அதிகரித்து கூறப்பட்டு பிறகு குறைக்கப்பட்டது குறித்து, ஒடிசா மாநில தலைமைச் செயலா் பி.கே.ஜெனா விளக்கமளித்தாா். அவா் கூறியதாவது: ஒடிஸா மாநில அரசு வெளிப்படையான நிா்வாகத்தை உடையது. விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள், ஊடகத்தினா் எனப் பலரும் இருந்தன. மீட்புப் பணிகள் முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. முதலில் ரயில்வே சாா்பில் 288 போ் இறந்ததாகக் கூறப்பட்டது. பின்னா், இறப்பு தொடா்பாக பாலசோா் மாவட்ட ஆட்சியா் முழுமையாக ஆய்வு செய்தபோது 275 போ் இறந்தது தெரியவந்தது. உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய எந்த அவசியமும் ஒடிஸா மாநில அரசுக்கு இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT