ரூ.2,000 நோட்டுகள் 
இந்தியா

இதுவரை வங்கிகளுக்குத் திரும்பி வந்த ரூ.2,000 நோட்டுகள் எவ்வளவு?

இதுவரை வங்கிகள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

DIN


புது தில்லி: புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரை வங்கிகள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதாவது, நாட்டில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 50 சதவிகித நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.  இந்த நோட்டு 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழக்கம் நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம், புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. வங்கிகளில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அதற்கு கால அவகாசம் அளித்தும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT