இந்தியா

ஆப்பிரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது: பியூஸ் கோயல்

ஆப்பிரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. 

DIN

ஆப்பிரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் 15 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை சந்தித்துப் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: ஆப்பிரிக்கா நாடுகளுடன் தனித் தனியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாக ஆப்பிரிக்காவுடனோ தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. ஆப்பிரிக்காவின் வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் இந்தியா நம்பிக்கை வாய்ந்த நாடாக திகழும் என்றார். 

மத்திய அமைச்சர் உடனான இந்த சந்திப்பில் அல்ஜீரியா, எகிப்து, கானா, கென்யா, மலாவி, மொசாம்பிக், மொராக்கோ உள்ளிட்ட 15 நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர். 

இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான வர்த்தகம் 90 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

தேசிய விருதுகள் பெற்ற Parking படக்குழுவின் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

SCROLL FOR NEXT