வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் மோடி அரசு புது அர்த்தம் கொடுத்துள்ளது: தர்மேந்திர பிரதான்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் புதிய அர்த்தம் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் புதிய அர்த்தம் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக ஒடிசாவின் தியோகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: வாக்கு வங்கி அரசியலை வளர்ச்சியை மையப்படுத்தியதாக மாற்றியது பிரதமர் மோடி அரசு: ஜெ.பி.நட்டா!
அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசின் நலத் திட்டங்களால் ஒடிசா அதிக அளவில் பயனடைந்துள்ளது. நலத்திட்டங்கள் மூலம் தியோகரில் உள்ள பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவிலான பயனை அடைந்துள்ளனர் என்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக நாட்டின் பல மாநிலங்களிலும் இது போன்ற விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.