முகப்பு
இந்தியா

அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: காங்கிரஸ் கண்டனம்

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமை செயலக அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப் படம்)
பகிர்:

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமை செயலக அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளதாவது, எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது.

விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விடலாம் என மோடி அரசு நினைக்கிறது.

அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய மோசமான குற்றச்சாட்டுகளே மோடி அரசாங்கத்தின் அடையாளமாகும்

மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும் உறுதியை அவை வலுப்படுத்துகின்றன

இவ்வாறு சோதனை மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதில் நிரந்தர வெற்றியடைய முடியாது எனக் குறிப்பிட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →