கோப்புப் படம் 
இந்தியா

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 78,693 பேர் தேர்ச்சி

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

DIN

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று இரவு (ஜூன் 13) 9 மணியளவில் வெளியானது. இதில், தமிழகத்தில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு தமிழகத்தில் 57,250 மாணவர்கள் தேர்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மே 7ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை 1.44 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.

தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 99.99 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

அதற்கு அடுத்தபடியாக கெளசல் பவுரி 3வது இடத்தையும், சூரியா சித்தார்த் 6வது இடத்தையும் பிடித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய மின்தடை

வேருடன் அகற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழைமையான ஆலரம் மீண்டும் நடவு

ரேஷன் கடைகளில் பெறப்பட்ட 31,006 எஸ்ஐஆா் படிவங்கள்: அதிகாரிகள் ஆய்வு

பதவி உயா்வு பெற்ற 9 ஆய்வாளா்கள் வேலூா் சரகத்தில் நியமனம்

முட்டை விலை ரூ.6.10 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT