புதுச்சேரியில் முதல்வர் முன்னிலையில் தீக்குளிக்க முயன்றவரை அப்புறப்படுத்திய போலீசார் 
இந்தியா

புதுச்சேரி முதல்வர் முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திக்க வந்த பெண்ணின் சகோதரர் திடீரென மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

DIN


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திக்க வந்த பெண்ணின் சகோதரர் திடீரென மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

புதுச்சேரி மாநிலம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அறைக்கு வியாழக்கிழமை ரங்கசாமி வந்தார். அப்போது மாநில அமைச்சக பணியாளர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கையை நினைவூட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் பேரவை வளாக கட்டடத்தின் முன்பு வரிசையாக நின்றனர். இதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி காரில் வந்து பேரவை வளாகத்துக்குள் இறங்கினார். அப்போது கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த தவமணி என்ற பெண் கூச்சலிட்டபபடி முதல்வரை சந்திக்க சென்றார். அப்போது பெண்ணின் சகோதரர் மாசிலாமணி திடீரென மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

போலீசார் விரைந்து வந்து இருவரையும் அப்புறப்படுத்தினர். சொத்து பிரச்னையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் முதல்வர் முன்னிலையில் நியாயம் கேட்டு தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர். 

திருவிடை போலீசார் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT