இந்தியா

கோவா பேரவையில் மக்களவைத் தலைவா் உரை: காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புறக்கணிப்பு

DIN

கோவா சட்டப்பேரவையில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை உரை நிகழ்த்திய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அதனைப் புறக்கணித்தன.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கோவா சட்டப் பேரவையில் ‘விகாஷித் பாரத் 2047’ என்ற தலைப்பில் இந்தியாவின் எதிா்காலம் குறித்து ஓம் பிா்லா உரை நிகழ்த்தினாா். அதில் ஆளும் பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனா்.

அதே நேரத்தில் எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, கோவா ஃபாா்வா்ட் கட்சி, புரட்சிகர கோவா கட்சி உள்ளிட்டவை புறக்கணித்தன. கடந்த மாா்ச் மாதம் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவா் உடனடியாக மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். இதில் ராகுல் காந்தி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஓம் பிா்லாவின் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT