முகப்பு
இந்தியா

தில்லி பயிற்சி மைய தீ விபத்து: 61 மாணவர்கள் காயம்!

தலைநகர் தில்லியில் முகர்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 மாணவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

Updated On : 16 ஜூன், 2023 at 12:06 PM
கோப்புப்படம்
பகிர்:

தலைநகர் தில்லியில் முகர்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 மாணவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

தில்லியில் முகர்ஜி நகரில் உள்ள கட்டடத்தில் 3-வது மாடியில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

உடனடியாக உள்ளே இருந்த மாணவ, மாணவிகள் மூன்றாவது மாடியில் இருந்து சன்னல் வழியாக கேபிள் வயர் மூலமாக கீழே இறங்கினர். கேபிள் வயர் மூலம் கீழே இறங்கும்போது சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது

Advertisement

இந்த தீ விபத்தில் 61 மாணவர்களுடன் வணிக அலுவலங்களில் இருந்த சில ஊழியர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும், இவ்விபத்தில் பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பில்லை எனவும், அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

61 மாணவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் 50 மாணவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.