இந்தியா

மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது: மத்திய இணையமைச்சர் ரஞ்சன் சிங்

மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் ரஞ்சன் சிங்  தெரிவித்துள்ளார்.

DIN

மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் ரஞ்சன் சிங்  தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய வெளியுறவு மற்றும் கல்வி இணையமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீட்டின் முன்பு நேற்று இரவு 8.30 மணியளவில் கூடிய போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய படையினர் கலவரத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு நிலவியது.

இச்சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால் காயம் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் ரஞ்சன் சிங் கூறியதவாது, நேற்று இரவு நடந்ததை பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது. எனது வீட்டை 50க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. எனது வீட்டின் தரை தளம் மற்றும் முதல் தளம் சேதம் அடைந்துள்ளது.

அப்போது நானோ அல்லது எனது குடும்பத்தினர் யாரும் அங்கு இல்லை. அந்த நேரத்தில், அதிருஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தற்போதுள்ள அரசால் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை. அதனால்தான் மத்திய பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. மாநில இயந்திரம் எப்படி தோல்வியடைந்தது என்று எனக்குத் தெரியவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT