குஜராத்தில் பிபர்ஜாய் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்ச் மற்றும் ஜாகாவ் துறைமுகத்திற்கு வரவுள்ளார்.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை மாலை மணிக்கு 6.30 மணியளவில் குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா இடையே கரையைக் கடந்தது.
பல்வேறு இடங்களில் கட்டடங்களில் மேற்கூரைகள் மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டன. பிபர்ஜாய் புயலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர். 23க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளது, 442 கிராமங்களில் வசிக்கும் 19,12,337 பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புயலால் பாதிக்கப்பட்ட கட்ச் ஜக்குவா கற்கடற்கை மற்றும் மாண்டிவி ஆகிய பகுதிகளை இன்று பார்வையிடுகிறார். பின்னர், அவர் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
பின்னர், அவர் பூஜ்யில் உள்ள சுவாமி நாராயண கோயிலையும் தரிசிக்க உள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பிற வசதிகளை மதிப்பாய்வு செய்வார் என்று அமைச்ச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.