முகப்பு
இந்தியா

நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு 108 ஆகப் பதிவு!

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆகப் பதிவாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:08 PM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆகப் பதிவாகியுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 108 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை (4,49,93,390) கோடியாக  உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை  5,31,893 ஆக உள்ளது. மருத்துவ சிகிச்சையில் மொத்தம் 1,983 ஆக பதிவாகியுள்ளது.

இதுவரை மொத்தம் 4,44,59,514 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →