ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!
ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இந்த நிலநடுக்கம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாங்கான ராம்பன் மாவட்டத்தில் 2.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 3.0 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் ஆழம் மேற்பரப்பில் இருந்து 5 கி.மீ கீழே 33.31 டிகிரி வடக்கே அட்சரேகை மற்றும் கிழக்கே 75.19 டிகிரி தீர்க்க ரேகையிலும் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.