கோப்புப் படம் 
இந்தியா

புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்புக்கு புதிய செயலி அறிமுகம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய செயலி அறிமுகம்.

DIN

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய செயலியை சேலம்  மாநகர காவல்துறை முன்னெடுப்புடன் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். 

இந்த செயலியை சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த செயலி புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இதற்கு புலம்பெய்ந்தோர் பாதுகாப்பு (மிக்கிரேன்ட் கேர்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை அவர்களின் முகவர்களுக்கும் காவல் துறைக்கும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வடமாநிலங்களிலிருந்து வந்து பிழைப்பிற்காக தமிழகத்தில்  தங்கியுள்ளனர். சேலத்தில் 4000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த செயலியில் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த மாநிலத்தில் எந்த முகவரியில் வசித்து வந்தார்கள், தற்போது எங்கு இருந்துகொண்டு பணியாற்றி வருகிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏதேனும் ஆபத்து நேரிட்டால், தொழிலாளர்கள் இந்த  செயலியில் நான்  பாதுக்காப்பாக இல்லை என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் தங்கள் இருப்பிடத்திலிருந்து காவல்துறை உதவியை நாடலாம். 

சேலம் மாவட்டத்திலுள்ள 4000-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களில் பாதிபேர் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சில நாள்களிலேயே பதிவிறக்கம் செய்து  பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு (மிக்கிரேன்ட் கேர்) எனும் இந்த செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது. இந்திய தொழிலாளர்கள் மாவட்ட காவல் துறையின்  உதவியோடு  தாங்கள் பாதுக்காப்பாக இருக்க உதவுகிறது என்றும்  எதிர்காலத்தில் இணைக்கக்கூடிய கூடுதல் அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்  சோனா கல்விநிறுவனத் துணைத்தலைவர்  சாக்கோ வள்ளியப்பா தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT