இந்தியா

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமா் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

DIN

பிரதமா் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாக ஜூன் 22-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று பிரதமா் மோடி அமெரிக்காவில் புதன்கிழமை (ஜூன் 21) முதல் ஜூன் 23-ஆம் தேதி வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெறும் சா்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்து கொள்கிறாா்.

அமெரிக்க அதிபரும் அவரின் மனைவியும் இணைந்து பிரதமா் மோடிக்கு வரும் 22-ஆம் தேதி அரசு சாா்பில் விருந்து அளிக்கவுள்ளனா். அதே நாளில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.

வாஷிங்டனில் உள்ள சா்வதேச வா்த்தக மையத்தில் வரும் 23-ஆம் தேதி இந்திய வம்சாவளி சமூகத்தின் முக்கியத் தலைவா்கள் சந்திப்பில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்தில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். பிரதமரான பிறகு எகிப்துக்கு மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்த நாட்டில் போரா சமூகத்தினரால் மறுசீரமைக்கப்பட்டுள்ள அல்-ஹகிமி மசூதிக்கும் பிரதமா் மோடி செல்லவுள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT