இந்தியா

ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தை போக்கவும் யோகா அவசியம்: முதல்வர் மான் 

யோகா செய்வதன் நன்மைகளையும், ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க யோகா பயிற்சி அவசியம் என்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மக்களை வலியுறுத்தியுள்ளார். 

DIN

யோகா செய்வதன் நன்மைகளையும், ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க யோகா பயிற்சி அவசியம் என்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மக்களை வலியுறுத்தியுள்ளார். 

ஜலந்தரில் நடைபெற்ற யோகஷாலா நிகழ்ச்சியில் முதல்வர் மான் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், 

யோகா பண்டைய இந்திய நடைமுறையாகும். இது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்க உதவும். 

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா உள்பட 15 ஆயிரம் பேருடன் முதல்வர் மான் இணைந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். 

ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மக்களை வலியுறுத்திய அவர், ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால், அது அவர் செய்யும் செயல்களிலும் பிரதிபலிக்கும். 

கடவுள் இந்த வாழ்க்கையை நமக்குக் கொடுத்திருக்கிறார், அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எளிமையான வாழ்க்கையை நடத்துமாறும், மேலும் தவறான விஷயங்கள் நமக்கு என்றும் வழிவகுக்காது என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

"பஞ்சாப் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்"

நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது, நேர்மறை ஆற்றல் நம்மைச் சுற்றி இருக்கும் என்று அவர் கூறினார். 

ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT