இந்தியா

மியான்மரில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்!

DIN

நெய்பிடாவ்: மியான்மர் நாட்டில் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவல்:

மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதன்படி இன்று காலை 5.43-க்கு யான்கோனில் ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் 48 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இரண்டாவதாக யான்கோனில் 160 கி.மீ தூரத்தில் ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது. இது 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. 

மூன்றாவதாக யான்கோனின் 227 கி.மீ தூரத்திலும், 25 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 அலகுகளாகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT