இந்தியா

எதிர்க்கட்சிகள் கூட்டம்: பிகார் வந்த கார்கே, ராகுல் காந்தி!

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பாட்னா வந்தடைந்தனர். 

DIN

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பாட்னா வந்தடைந்தனர்.  

மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுத்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் அவா் ஏற்பாடு செய்துள்ள எதிா்க்கட்சிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. 

இதில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பாட்னா வந்தடைந்தனர். 

முன்னதாக கட்சிக்கூட்டம் தலைவர்கள் இருவரும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். பிகார் மாநில காங்கிரஸ் அலுவலகத்திற்கும் இருவரும் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

மேலும் இன்றைய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளா் தீபன்கா் பட்டாச்சாரியா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT