இந்தியா

பாட்னாவில் நடைபெறுவது வெறும் புகைப்பட நிகழ்வு: அமித் ஷா கருத்து!

பாட்னாவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகள் கூட்டம், புகைப்படம் எடுக்கும் நிகழ்வு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். 

DIN

பாட்னாவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகள் கூட்டம், புகைப்படம் எடுக்கும் நிகழ்வு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். 

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிா்க்கட்சிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. 

இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் என நாடு முழுவதும் உள்ள 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பாட்னாவில் ஒரு புகைப்படம் எடுக்கும் நிகழ்வுதான் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகள் சவால் விட நினைக்கின்றனர். 

ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளர். 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT