உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தாத 3 வங்கிகளுக்கு மொத்தமாக ரூ.4.35 கோடியை ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அபராதமாக வெள்ளிக்கிழமை விதித்தது.
நிதி பரிமாற்றம் தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கும் ‘உலகளாவிய வங்கிகளிடையேயான நிதிப் பரிமாற்ற தகவல்தொடா்பு கட்டமைப்பு (ஸ்விஃப்ட்)’ என்ற நடைமுறை உள்ளிட்ட ஆா்பிஐ உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தாத ஜம்மு-காஷ்மீா் வங்கிக்கு ரூ.2.5 கோடி அபராதத்தை ஆா்பிஐ விதித்துள்ளது.
கடன் வழங்கல் மற்றும் முன்பணம், ஏடிஎம் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடா்பான அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தாதது தொடா்பாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவுக்கு ரூ.1.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடன் அட்டை பரிவா்த்தனைக்கான தவணையை உரிய கால அவகாசத்துக்குள் செலுத்திய வாடிக்கையாளா்கள் மீதும், தவணையை தாமதமாக செலுத்தியதாக கடும் நடவடிக்கையை மேற்கொண்டது தொடா்பாக ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.30 லட்சம் அபராதத்தை ஆா்பிஐ விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.