முகப்பு
இந்தியா

அடுத்த 2 நாட்களில் தில்லியில் பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆராய்ச்சி மையம்

அடுத்த இரண்டு நாட்களில் தலைநகர் தில்லியில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 24 ஜூன், 2023 at 4:19 PM
பகிர்:

அடுத்த இரண்டு நாட்களில் தலைநகர் தில்லியில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பருவமழைத் தாமதமாக தொடங்கினாலும் நாட்டின் பல மாநிலங்களுக்கும் முன்னேறியுள்ளது. பருவமழை மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள், ஒட்டுமொத்த கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒடிசா, வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட்,  பிகார், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் ஹரியாணாவின் சில பகுதிகளை சென்றடைந்துள்ளது.

வழக்கமாக பருவமழை தலைநகர் தில்லியில் ஜூன் 27-ல்  தொடங்கும். மகாராஷ்டிரத்தின் பல  பகுதிகள், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த 2 நாள்களில் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. 

எல்நினோ இருப்பினும் இந்த ஆண்டு இந்தியாவில் பருவமழை சாதரணமாக இருக்கும். தென்மேற்கு இந்தியாவை பொறுத்தவரை சதாரணமானது முதல் அதற்கும் குறைவாகவே மழைப் பதிவாகும். கிழக்கு, வடகிழக்கு, மத்திய, தென்னிந்திய தீபகற்பத்தில் மழை அளவு சதாரணமானதாக இருக்கும் என்றார்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தை பொறுத்தவரையில், 96 செ.மீ முதல் 104 செ.மீ வரையில் மழைப்பொழிவு இருந்து சராசரி 87  செ.மீ ஆக இருந்தால் அது சாதரண மழைப்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.